http://www.esnips.com/web/Abdul-kalam-Billion-Beats/
அப்துல் கலாம் அவர்களின் பில்லியன் பீட்ஸ் மென்னூல்களின் தொகுப்பு
சாதனை புரிந்த சாதனை நாயக / நாயகிகளின் கட்டுரைகள் இதில் உள்ளன.
http://www.esnips.com/web/Abdul-kalam-Billion-Beats/
இந்தியா முழுவதும் உள்ள எண்ணற்ற வெற்றிக் கதைகளை பிரசுரித்து அவற்றுக்கு உரிய முன்னுரிமை கொடுக்கும் வகையில் வாரம் இருமுறை பதிப்பாகும் மின் இதழை (ஈ-பேப்பர்) முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தொடங்கியுள்ளார்.நாடு முழுவதும் உள்ள ஊடகங்கள் இதுபோன்ற வெற்றிபெற்ற சம்பவங்களை பிரசுரிப்பதில் பின்தங்கியிருப்பது வருந்தத்த்க்கது என்று தமது முதல் இதழில் கலாம் குறிப்பிட்டுள்ளார்.
பில்லியன் பீட்ஸ் என்ற பெயரில் அப்துல் கலாமின் சொந்த இணையதளத்தில் எழுதப்படும் வெற்றிக் கதைகள் மூலம் அறிவுசார் இணைப்பை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.அப்துல் கலாமுடன் அவரது நண்பர் பொன்ராஜ் இணைந்து இந்த மின் ஊடகப் பதிப்பைத் தொடங்கியுள்ளனர்.ஒவ்வொரு துறையிலும் ஏராளமான வெற்றிக் கதைகள் இருப்பதாகவும், அவற்றை இணைப்பதன் மூலம் அவை மேலும் பிரபலமடைய முடியும் என்றும் கலாம் குறிப்பிட்டுள்ளார்.தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளிப்பதற்காக கலாம் சென்றபோது, அவருக்கு இந்த யோசனை உதயமானது. பேட்டியை முடித்துக் கொண்டு வெளியே வந்த கலாம் தமது நண்பரிடம், சாதனையாளர்களின் கதைகளை ஏன் நாம் முன்னிலைப்படுத்தக் கூடாது? அதுபோன்ற உதாரண புருஷர்களை ஏன் வெளிச்சத்திற்குக் கொண்டுவரக் கூடாது என்று கேள்வி எழுப்பினார்
.அந்த வகையில் உருவானதே பில்லியன் பீட்ஸ் மின் இதழ் என்று கலாம் கூறியுள்ளார்.(ஆங்கிலத்தில்)முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் "பில்லியன் பீட்ஸ்' என்ற மின்னிதழைத் தொடங்கியுள்ளார். தொலைநோக்கு, சரியான பாதையில் இளைய தலைமுறையைத் தூண்டிவிடுதல், கலாமின் லட்சியக் கனவுகள் கொண்ட இந்த இதழில் அரசியல், குற்றச் செய்திகள், எதிர்மறைச் செய்திகளுக்கு இடமில்லை. குழந்தைகளை நேசிக்கும் கலாம் இந்த இதழைக் குழந்தைகள் தினமான நவம்பர் 14-ம் தேதி வெளியிட்டுள்ளார். இந்த இதழ் மாதம் இரு முறை புதுப்பிக்கப்படுகிறது. ""இந்த இதழில் குழந்தைகள், மாணவர்கள் தங்களது படைப்புகள், யோசனைகள், கருத்துகளை அனுப்பலாம். புதிய சிந்தனைகள் வரவேற்கப்படுகின்றன'' என்றார் இதன் கருத்து ஆசிரியர் (கன்டென்ட் எடிட்டர்) வி.பொன்ராஜ். இதைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களைக் கொண்ட மன்றங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பெங்களூரில் இதன் ஆசிரியர் குழுவும் வடிவுமைப்புக் குழுவும் இயங்குகின்றன. தொழில்நுட்பக் குழு மதுரையில் செயல்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இணையதளம்:
http://www.abdulkalam.com
No comments:
Post a Comment