நந்திகிராமம், பிப். 20: மேற்கு வங்கம் நந்திகிராமத்தில் பூமி பாதுகாப்பு அமைப்பினருக்கும், மார்க்சிஸ்ட் கட்சியினருக்கும் இடையே நடந்த மோதலில் 11 பேர் காயமடைந்தனர்.
தக்கபுரா பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர்களின் 5 வீடுகளை திரிணமூல் காங்கிரஸ் ஆதரவு பெற்ற பூமி பாதுகாப்பு அமைப்பினர் திங்கள்கிழமை இரவு சூறையாடினர். இதனைத் தொடர்ந்து அங்கு மீண்டும் வன்முறை வெடித்தது. இது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
போலீஸôரும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் தக்கபுராவில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் நந்திகிராமத்தில் ஏற்கெனவே நடைபெற்ற கொலை, தீவைப்புச் சம்பவங்கள் தொடர்பாக 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட இவர்களில் 14 பேரை போலீஸ் காவலில் வைக்கவும், 17 பேருக்கு ஜாமீன் வழங்கியும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
Thanks : Dinamani
No comments:
Post a Comment