பெங்களூர், பிப். 20:
தீவிரவாதிகள் என்ற பெயரில் அப்பாவிகளைத் துன்புறுத்த வேண்டாம் என்று போலீஸôருக்கு மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக, பெங்களூரில் புதன்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
தீவிரவாதிகளுக்கும், தீவிரவாதத்தை ஆதரிப்பவர்களுக்கும் காங்கிரஸ் கட்சி என்றைக்குமே ஆதரவு தெரிவித்தது இல்லை. எதிர்காலத்திலும் ஆதரவு தெரிவிப்பது இல்லை.
தீவிரவாதிகளுக்கும், தீவிரவாதத்தை ஆதரிப்பவர்களுக்கும் காங்கிரஸ் கட்சி என்றைக்குமே ஆதரவு தெரிவித்தது இல்லை. எதிர்காலத்திலும் ஆதரவு தெரிவிப்பது இல்லை.
ஆனால் தீவிரவாதிகள் என்ற பெயரில் அப்பாவிகளைத் துன்புறுத்தக்கூடாது. இதில் விசாரணை நடத்தும் அதிகாரிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
எந்தக் காரணத்தைக் கொண்டும் அப்பாவிகள் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுவிடக்கூடாது. தற்போது தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையதாக சிலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்கள் பத்திரிகைகள், தொலைக்காட்சி முன் நிறுத்தப்பட்டு படம் பிடித்து பிரசுரிக்கவும், தொலைக்காட்சியில் வெளியிடவும் அனுமதிக்கப்படுகிறது.
இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நபர்கள் நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்டால் அவர்களது எதிர்கால வாழ்க்கை என்னவாகும். எனவே விசாரணை அதிகாரிகள் இதுபற்றி சிந்திக்க வேண்டும்.
தற்போது விசாரணை அதிகாரிகள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் அதிருப்தி அளிக்கிறது என்றார் அவர்.
No comments:
Post a Comment