Thursday, February 14, 2008

பார்ப்பன இந்து மதவெறிக்கு எதிராகக் கருத்திலும் களத்திலும் போராடுவோம் !

இசுலாமிய-கிறித்தவ மக்களை எதிரிகளாகச் சித்திரித்து ஆர்.எஸ்.எஸ்.கும்பல் நடத்தும் மதக்கலவரங்களுக்கு அவதூறுக்ளே மூலப் பொருளாக விளங்குகின்றன. வாழ்க்கை , பண்பாடு, கல்வி, வரலாறு, பொருளாதாரம், அரசியல், பொழுதுபோக்கு, மொழி என அனைதுக் துறைகளிலும் சிறுபான்மை மத மக்களை வெறுக்கும் அண்ணம் இவை பிரச்சாரம் செய்யப்படுகின்றன. முசுலீம்கள் மீதான துவேசம் என்பதைச் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் ஆர்.எஸ்.எஸ்- இன் பண்பாட்டு விழுமியங்கள் அனைத்தோடும் காங்கிரசு - போலிக் கம்யூனிஸ்டுகள் - திராவிடக் கட்சிகள் தமிழன ஆர்வலர்கள் ஆகிய சகல பிரிவினடும் வெவ்வேறு அளவில் ஒன்றுபடுகின்றனர். இதுவே இந்து மதவெறியர்களின் பலமாக இருக்கிறது. இத்தகைய அவதூறுகளை பெரும்பான்மை மக்களின் கருத்தாக இயல்பாக மாற்ற முடிகிறது.

புரட்சி கலைஞர்' விஜயகாந்த் இந்து முன்னணியின் பிரச்சாரத்தையே வசனமாகப் பேசுவதும், விடுதலைப் புலிகளும் அவர்களது ஆதரவளரான பழ.நெடுமாறனும் சிவசேனா பால் தாக்கரேயோடு உறவாடுவதும், இப்போது பழ.நெடுமாரனுடன் இணைந்திருக்கும் சுப.வீரபாண்டியன் 'அர்த்தமுள்ள இந்து மதம்' எழுதிய கண்ணதாசனையும் 'நம்மாளு' என்று போற்றுவதும், கருணாநிதியும் - ஜெயலலிதாவும் போட்டிக் கொண்டு இந்து முன்னணி இராம.கோபாலனைத் தாஜா செய்வதும் , வேத காலத்தையும் விவேகானந்தரையும் போற்றும் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடும், கம்பராமயணமே எனக்குப் பிடித்த நூலென்று புல்லரிக்கும் நல்லகண்ணுவும், பா.ஜ.க.வின் அக்கிரகாரத்திற்க்குள் இருந்து கொண்டே சேரி விடுதலை பேசும் திருமாவளவனும்,கிருஷ்ணசாமியும் - தலித் பத்திரிகையும், பா.ஜ.க அரசுக்காக உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கும் 'புரட்சி புயக்' வை.கோவும், வாஜ்பாயி மந்திரி பதவி கொடுத்தால் பூணுல் போடவும் தயாராக இருக்கும் பா.ம.க.ராமதாசும்- இப்படிப் பார்ப்பன இந்து மதத்தின் அரசியலையும் பண்பாட்டையும் , நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரிப்போர் பலர் இருக்கின்றனர்.

பத்தாண்டுகளுக்கு முன்பு வரையிலும் கூடத் தீவிர ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்புச் சவடால் அடித்தவர்கள் இப்போது இவ்வாறு மாறியிருப்பதை வெறும் அரசியல் சந்தர்ப்பவாதம் என்று மட்டும் மதிப்பிடக் கூடாது, தாங்கள் இவ்வாறு இந்துத்துவத்தை அரசியல் ரீதியாகவோ , பண்பாட்டு ரீதியாகவோ ஆதரித்தாலும் தங்களது வாங்கு வங்கியும் ஆதரவாளர்களும் தம்மை விடு விலகிவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கை இவர்களுகு இருக்கிறது, இந்தத் 'துணிச்சலுக்குக் காரணம் உண்டு. இந்தியப் பண்பாடு , தமிழ்ப் பண்பாடு ஆகியவற்றில் நீக்கமற விரவியிருக்கும் பார்ப்பனீய விழுமியங்களை எதிர்த்த போராட்டத்தினூடாக இவர்கள் தங்களது அடித்தளத்தை உருவாக்கிக் கொள்ளவில்லை.

சாதியம் , இனவாதம் உள்ளிட்ட இந்துத்துவக் க்றை படிந்த பண்பாட்டுடனும் கண்ணோட்டங்களுடனும் நிலவிவரும் சமூக அடித்தளத்தின் மீது ஏறி நின்று ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்புச் சவடால் அடித்தார்கள். இப்போது அதே அடித்தளத்தின் மீது ஏறி நின்று பா.ஜ.கா விடன் கை குலுக்குகிறார்கள்.இந்தியாவின் மதச்சார்பற்ற அரசியலின் தலைமைச் சக்திகள் எனப்படுவோர் இப்படி இருப்பது திடீரென்று ஏற்பட்ட விபத்தல்ல. வெள்ளையர் காலந்தொட்டே காந்தி, திலகர், பாரதி போன்றோர் இப்படித்தான் இருந்தனர். இத்தகைய அரசியல் நிகழ்ச்சிப் போக்கு ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு எத்தகைய ஆதரவான சூழ்நிலையை உருவாக்கியிருக்கும் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ளலாம்.

அரசியல் துறையே இப்படி இந்துமயமாக மாறியிருக்கும் போது, இலக்கியம், இசை, பத்திரிகைகள் , திரைப்படம், தொலைக்காட்சிகள் எப்படி இருக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை. எனவே, ஆர்.எஸ்.எஸ் உருவாக்கிப் பிரச்சாரம் செய்யும் அவதூறுகள் அவர்களிடமிருந்து மட்டும் தான் கிளப்ப வேண்டும் என்பதில்லை. நீங்கள் எதிர்பாராத ஏதாவது ஒரு திசையிலிருந்தும் அந்த அவதூறுகள் வரும்.தற்போது பள்ளி கல்வித் திட்டத்தில் வரலாற்றைத் திருத்தும் கரசேவையினை இந்து மதவெறியர்கள் பகிரங்கமாக ஆரம்பித்து விட்டனர். இதை எதிர்க்கும் 'மதச் சார்பற்ற' எதிர்க்கட்சிகளோ பாராளுமன்றத்தில் ஒப்பாரி வைக்கின்றனர்.

இத்தகைய பாராளுமன்ற பஜனைகள் மூலம் அவர்களை வீழ்த்த முடியாது; வீதியில் இறங்கி மக்களை அரசியல் படுத்தி, அணி திரட்டி இந்து மதவெறியர்களுடன் நேரடிச் சம்ர் புரிவதன் மூலமே வேரறுக்க முடியும். இத்தகைய புரட்சிகர அரசியல் நடைமுறையை 90-ஆம் ஆண்டின் முழுவதும் - திருவரங்கம் கருவறை நுழைவுப் போராட்டம் முதல் தமிழ் மக்கள் இசை விழா வரை - பல்வேறு வடிவங்களில் செயல்படுத்தி வருகின்றனதோழர்களும் செய்ய வேண்டிய முக்கியமான பணி ஒன்றிருக்கிறது. இந்து மதவெறியர்களின் இத்தகைய அவதூறுகளை எங்கெல்லாம் காண்கிறோமோ - திரைப்படம், நாவல் , கவிதை, பத்திரிகை , வானொலி - வானொளி நிகழ்ச்சிகள் - அங்கெல்லாம் அவற்றினை முறியடிக்க வேண்டும்.

துண்டறிக்கை, சுவரெழுத்து, சுவரெட்டி, கடிதம், நேரடி விவாதம் போன்ற வடிவங்களில் மக்களிடம் உண்மையைக் கொண்டு செல்ல வேண்டும். அவதூறுகளை மூலதனமாக வைத்து இந்து முண்னணி - ஆர்.எஸ்.எஸ் கும்பல் நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் மேற்கண்ட முறைகளில் தலையிட வேண்டும்.இத்தகைய போர்க்குணமிக்க - செயலூக்கம் நிறைந்த முயற்சிகளினூடாகத்தான் இந்து மதவெறியின் பிடியிலிருந்து நாட்டையும் - மக்களையும் விடுவிக்க முடியும். இந்து மதவெறி பாசிஸ்டுகளுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆயுதமாகப் பயன்பட வேண்டும் என்பதே எமது விருப்பம்

கருத்து எழுதியவர் நக்ஸல்பாரி-தமிழ்நாடு,

Thanks:satyamagam.com

No comments: