Friday, February 22, 2008

'உணவுப் பொருட்களின் விலையேற்றத்தால் வறுமையின் பிடியில் மக்கள் தள்ளப்படுவார்கள்'

உலகெங்கும் உணவுப் பொருட்களின் விலை சடுதியாக அதிகரித்து வருவதன் காரணமாக மேலும் பல லட்சம் மக்கள் வறுமையின் பிடிக்குள் தள்ளப்படுவார்கள் என்று எச்சரித்துள்ள உலக உணவுத்திட்டம், அதேவேளை அந்த மக்களுக்கான உணவு உதவிகளைச் செய்வதற்கு உதவி நிறுவனங்கள் மிகவும் சிரமப்படுவதாகவும் கூறியுள்ளது.

உணவுப் பொருட்களில் குறிப்பாக அரிசிதான் மிகவும் பிரச்சினைக்குரியதாக இருக்கிறது.

கடந்த வருடத்தில் மாத்திரம் அரிசியின் விலை 50 சதவீதம் அதிகரித்துள்ளது. உள்ளூரில் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக பல நாடுகள் ஏற்றுமதியை மட்டுப்படுத்தியுள்ளன.

அதனால் உலக சந்தையில் விலை மேலும் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.

அண்மைய காலத்திங்களில், இந்த வருடத்தில்தான், உலகில் நமக்குத் தேவையான அளவை விட குறைவான அளவில் அரிசி உற்பத்தியாகவுள்ளது.

உலகிலேயே அதிகளவு அரிசியை ஏற்றுமதி செய்யும் நாடு தாய்லாந்துதான். இந்த அரிசி விலையேற்றத்தால், அங்கு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது அது ஏற்படுத்தும் தாக்கம் குறித்த சிறப்புப் பெட்டகத்தை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

Thanks:BBCTamil

No comments: