Sunday, February 5, 2012

முஸ்லிம்களை ஏமாற்றும் மத்திய அரசு




சிறுபான்மை முஸ்லிம்களுக்கு மத்திய அரசு பல நலத் திட்டங்களை அவ்வப்போது அறிவிக்கின்றது. அவை பத்திரிகைகளில் முக்கியச் செய்திகளாக இடம் பெறும். அதன்பின் அத்திட்டங்கள் மூலம் முஸ்லிம்களுக்கு உரிய பயன்கள் கிடைக்குமா என்றால் அந்தத் திட்டங்கள் என்னவென்றே முஸ்லிம் சமுதாயத்திற்குத் தெரியாது.

அரசு அதிகாரிகளை அணுகி குறிப்பிட்ட திட்டம் குறித்து கேட்டால் - இன்னும் மத்திய அரசிடமிருந்து முறையான உத்தரவு வரவில்லை என்று அதிகாரிகள் பதில் சொல்வார்கள். சிறுபான்மை மக்களுக்கான திட்டங்கள் வெறும் ஏட்டளவில்தான் உள்ளது.

முஸ்லிம்களின் கல்வி, பொருளாதார நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க நீதிபதி ராஜேந்திர சச்சார் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது மத்திய அரசு. இக்குழு இந்தியா முழுவதும் நேரடியாக கள ஆய்வு மேற் கொண்டு 404 பக்கங்களைக் கொண்ட ஆய்வறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. இந்திய நாட்டில் சிறுபான்மையினரான முஸ்லிம்களின் வாழ்க்கை நிலையின் அவலங்கள் இவ்வறிக்கையின் மூலம் வெளிப்பட்டபோது முஸ்லிம்கள் மாத்திரமல்லாமல் சமூக ஆர்வலர்களும் பெரும் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.

பல மாநிலங்களில் கல்வி, பொருளாதார நிலைகளில் தலித் மக்களை விடவும், துப்புரவுத் தொழிலாளர்களை விடவும் முஸ்லிம்களின் நிலை மிகவும் பின் தங்கியிருப்பதும், கல்வி, வேலை வாய்ப்பு போன்றவை முஸ்லிம் சமூகத்திற்கு மறுக்கப்பட்டு வரும் உண்மைகளும் வெளிச்சத்திற்கு வந்தன.

நாடு முழுவதும் இதற்கு விமர்சனங்களும் எழுந்தன. நாடாளுமன்றத்திலும் இது எதிரொலித்தது. இதனால் முஸ்லிம்களின் அதிருப்தியைத் தவிர்க்கும் வகையில் உடனடியாக சச்சார் கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு 15 அம்சத் திட்டத்தைக் கொண்டு வந்தது மத்திய அரசு. இதன்படி முஸ்லிம்கள் கணிசமாக வாழ்கின்ற 90 மாவட்டங்களை கண்டறிந்து அங்கு கல்வி, வேலை வாய்ப்பு, சுகாதாரம் மற்றும் வங்கிகள் உள்ளிட்ட பணிகள் தொடங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.

நாட்டில் பொதுவாக முஸ்லிம்களை கல்வி, வேலை வாய்ப்புகளில் முன்னேற்றுவதற்கு உண்டான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் அறிவித்தது மத்திய அரசு.

ஆனால் நீதிபதி சச்சார் கமிட்டி அறிக்கையின் அடிப்படையிலும், முஸ்லிம்களின் கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பு தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அடிப்படையிலும் முஸ்லிம்களுக்கு தேசிய அளிவில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதுமுள்ள முஸ்லிம் இயக்கங்களால் எழுப்பப்பட்டு வருகிறது.


இதனைக் கண்டு கொள்ளாத மத்திய அரசு 15 அம்சத் திட்டங்கள் என்ற பெயரில் முஸ்லிம்களைத் திருப்திபடுத்த நினைத்து முஸ்லிம்களை முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாய்மாலம் செய்து வருகிறது.

அதற்கேற்றாற்போல், மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், “மிஸ்ரா கமிஷன் அமைக்கப்பட்டது முஸ்லிம்களின் நிலையை மத்திய அரசு அறிந்து கொள்வதற்குத் தான்...'' என்று பேசி வருகிறார். அதாவது, வேறு வார்த்தைகளில் சொன்னால் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்காக ரங்கநாத் மிஸ்ரா கமிஷனை நியமிக்கவில்லை என்று சொல்கிறார் ப.சிதம்பரம்.

இந்நிலையில்தான், நீதிபதி சச்சார் கமிட்டி அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள - பொதுவாக பரவலாக செய்தியாக்கப்படாத அல்லது அறியப்படாத -நாடு முழுவதும் முஸ்லிம்களுக்கு வாடகைக்கு வீடு கொடுப்பது மறுக்கப்பட்டு வரும் பிரச்சினையை கையிலெடுத்திருக்கிறது மத்திய அரசு.

சச்சார் அறிக்கையில், ஓரளவு தொழில் மற்றும் வேலை வாய்ப்பு பெற்றிருக்கும் முஸ்லிம்களுக்கு அவர்கள் சார்ந்துள்ள மதத்தைக் காரணம் காட்டி, வாடகைக்கு வீடு கொடுக்க மறுக்கப்பட்டு வருகிறது என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த விஷயத்தை கையிலெடுத்திருக்கும் மத்திய அரசு, ஒரு வரைவு திட்டத்தை தயாரித்து வருகிறது.

இந்த வரைவுத் திட்டத்தின்படி, சிறுபான்மை முஸ்லிம்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகள் மட்டுமல்லாது வாடகைக்கு வீடு தர அல்லது வீட்டு வசதியை மறுப்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கவும், ரூ. 5 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் வழிவகை செய்திருக்கிறது மத்திய அரசு.

இந்த சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு மத்திய அரசின் சிறுபான்மை நலத்துறை முழு முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் இதனால் முஸ்லிம்களுக்கு எவ்வித பயனும் விளையப் போவதில்லை. அதே சமயம், மத்திய காங்கிரஸ் அரசை முஸ்லிம்கள் பாராட்டப்போவதுமில்லை.

முஸ்லிம்களுக்கு வாடகைக்கு வீடு தரவில்லை என்றால் சட்டப்படி அது தவறு என்பதை விளங்கிக் கொள்ளும் வீட்டின் உரிமையாளர், வாடகைத் தொகையையும், முன் பணத்தையும் வேண்டுமென்றே கூட்டிச் சொல்லி தானாகவே முஸ்லிம்கள் விலகிக் கொள்ளும் வகையில் நடந்து கொண்டால் சட்டத்தால் அவர்களை என்ன செய்து விட முடியும்?

ஒரு வேளை அதிக வாடகை இருந்தாலும் ஓ.கே. என்று ஒப்புக் கொள்ளும் ஒரு சிலரால் வீட்டு உரிமையாளருக்குத்தான் ஆதாயம் ஏற்படும். இதுமட்டும்தான் இச்சட்டத்தால் ஏற்படும் பயனாக இருக்க முடியும்.

மத்திய அரசு நடைமுறை யதார்த்தங்களை புரிந்து கொள்ளாமல் இயற்றும் சட்டங்களால் எவ்விதப் பிரயோஜனமும் ஏற்படப் போவதில்லை. இதுபோன்ற வீண் நடவடிக்கைகளை விட்டு விட்டு முஸ்லிம்களின் நலனில் உண்மையான அக்கறை செலுத்தி அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை விகிதாச்சார அடிப்படையில் உயர்த்தித் தர மத்திய அரசு முன் வர வேண்டும்.

இது ஒன்றுதான் முஸ்லிம்களை முன்னேற்றுவதற்கான ஆக்கப்பூர்வமான செயல் திட்டமாக இருக்கும். இதுவல்லாமல் 15 அம்சத் திட்டம் என்ன 80 அம்சத் திட்டம் போட்டாலும் அது - தேர்தல் பிரச்சாரத்தில் சொல்லி முஸ்லிம்களை ஏமாற்ற மட்டுமே உதவும்.
தவல்கள் உதவி : கீற்று

Saturday, February 4, 2012

பெருகி வரும் R S S நச்சு பிரச்சாரம்



405767_239757852765394_100001935433157_543127_1202946230_n.jpg409564_236057676468745_100001935433157_534253_177674296_n.jpg299586_189640214443825_1807331241_n.jpg


தமிழகத்தை சங்கபரிவார்கள் குறிவைத்து வெகு தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். மூவாயிரம் முழு நேர ஊழியர்கள் தமிழகம் முழுவதும் தீவிர களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
1 .மதுரையில் நடந்த பயிற்சி முகாம்
284693_128542970571582_100002476384427_172055_4105536_n.jpg
3 .துப்பாக்கி சுடும் பயிற்சி
298186_105314426246994_100003053106615_43922_1605216290_n.jpg
2 .ஓராசியர் பள்ளி எனும் பெயரில் கிராமங்களில் விஷ பிரச்சாரம்.பிஞ்சு மனதில் பதியபடுதல்.
285101_128534257239120_100002476384427_172040_3365520_n.jpg
ஆர்.எஸ்.எஸ்.இன் அணிவகுப்பு ..கன்னியாகுமரியில் நடைபெற உள்ளது.306905_155811984511017_100002466504047_274489_2094089631_n.jpg

301071_155812117844337_100002466504047_274495_1832494811_n.jpg


அகத்தின் அழகு, நகத்திலும் தெரியும்!

Nail Care
நம்மில் பலர் முகத்தை அழகாக்குவதற்கு அக்கறை எடுத்துக் கொள்வதைப்போல உடல் உறுப்புகள் பலவற்றினை பாதுகாப்பதில் அக்கறை செலுத்துவதில்லை. அகத்தின் அழகு முகத்தில் மட்டுமல்ல நகத்திலும் தெரியும்.

நகத்தை பாதுகாப்பது அழகுக்காக மட்டுமல்ல அது ஆரோக்கியத்துடன் தொடர்புடையது என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். ஏனெனில் உடலில் எற்படும் பல்வேறு பிரச்சினைகளை நகம் காட்டிக்கொடுத்துவிடும். நகத்தினை பாதுகாப்பது குறித்து அழகியல் நிபுணர்கள் கூறும் கருத்துக்கள் உங்களுக்காக.

அழகா வெட்டுங்க

நகங்கள் வெட்டுவது தனி கலை. ஈரமாக இருக்கும் போது நகங்களை ஷேப் செய்தால், அவை உடைவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, நகங்கள் ஈரமாக இருக்கும்போது வெட்டுவதை தவிருங்கள்.

நகப் பளபளப்பு

கிளிசரின் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து,அதை நகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், நகங்கள் பளபளப்பாக இருக்கும். அதே போல், பாதாம் எண்ணெயை நகங்களில் பூசி சிறிது நேரம் கழித்து, கடலை மாவினால் கழுவினாலும் நகம் பளபளப்படையும். மாத்திற்கு ஒரு முறை இப்படி செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

ஆலிவ் எண்ணெயை மிதமாக சூடுபடுத்தி அதை விரல்களில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் நகங்கள் நன்றாக வளரும்.

மருதாணி நல்லது

நகங்களுக்கு மருதாணி இலை வைப்பது அழகோடு, ஆரோக்கியத்திற்கும் தொடர்புடையது. தினமும் நெயில் பாலிஸ் போடுவது கூடாது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு சில நாட்களாவது இடைவெளி விடும்போதுதான் நகத்தின் உண்மை தன்மையை அறிய முடியும்.

நகத்தின் மேல் பேஸ்கோட் தடவி அதன் மேல் விரும்பும் நிறத்தில் நகச்சாயத்தை இரண்டு முறை தடவ வேண்டும். அ‌ப்போதுதா‌ன் ‌நிற‌த்‌தி‌ன் அட‌ர்‌த்‌தி அழகாக இரு‌க்கு‌ம். விரல்களுக்கு நடுவே பஞ்சினை வைத்து விட்டு தடவுவதால் நகச்சாயம் விரல்களுக்கிடையே பரவுவதை தடுக்கலாம். நகச்சாயம் விரல்களில் பரவிவிட்டால் ஒரு குச்சியை நெய்ல் பாலிஷ் ரிமூவரில் நனைத்து அதை அகற்றலாம்.

பற்களால் கடிப்பது கூடாது

நகத்தை பற்களால் கடிக்க கூடாது. இது நரம்பு கோளாறு உள்ளது என்பதை எடுத்துக்காட்டும். துணி துவைக்க தரமான சோப்புகளை பயன்படுத்துங்கள். வீட்டு வேலை முடிந்ததும் கைகளை கழுவுங்கள். சிறிது நேரம் கழித்து கிரீம் தடவுங்கள். இதனால் நகங்களை உடையாமல் பாதுகாத்து கொள்ளலாம்.

பெடிக்யூர், மெனிக்யூர்

நகங்கள் காய்ந்து வறண்ட தன்மையுடன் இருந்தால் அதற்கு ஏற்ப மாய்ச்சரைசர் கிரீம்களை தடவவேண்டும். வாயகன்ற பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி அதில் எலுமிச்சம் பழத்தை பிழிந்து விடவேண்டும். அதில் நகமும், கைகளும் நன்றாக மூழ்கும் படி ஊறவைக்கவேண்டும். இது கைகளும், நகமும் வறட்சியடைவதை தடுக்கும்.

சிலருக்கு நகங்கள் வளராமல் குட்டையாக இருக்கும். அவர்கள் மாதம் ஒருமுறையாவது, பெடிக்யூர், மெனிக்யூர் செய்து கொள்ளவேண்டும். கை, கால்களை நன்றாக மசாஜ் செய்வதன் மூலம் நகம் நன்றாக வளரும்.

ஊட்டச்சத்துள்ள உணவு

நகங்களை கடினமாக வைக்க புரோட்டீன் மற்றும் சத்துள்ள உணவை சாப்பிடவும். நகத்தின் வளர்ச்சிக்கு கரோட்டின் என்ற புரதச்சத்து தான் காரணம். உணவில் புரதம் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். வைட்டமின் ஏ, கால்சியம் நிறைந்த உணவுகளை உண்ணவேண்டும். பழம், காய்கறிகளை சாப்பிடுவது பளபளப்பு தரும்.துத்தநாகம், வைட்டமின் பி உணவுகளை சேர்த்துக்கொள்ளவேண்டும். இரும்புச் சத்து குறைவாக இருந்தால் நகங்கள் எளிதில் உடையும். பட்டை பட்டையாக பிரியும். எனவே இரும்புச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

தினந்தோறும் 10 டம்ளர் தண்ணீர் அருத்துவது நக அழகுக்கு தேவையானது. மேலும் பழரசங்கள் அருந்துவதும் நகத்திற்கு வலிமை தரும்
Source: ThatsTamil.com (OneIndia)
http://tamil.boldsky.com/beauty/body-care/2012/nail-care-tips-tricks-women-aid0174.html

வயிற்றுக்கு இதமளிக்கும் ஓமத் திரவம்

Ajowan
ஓமம் சித்த ஆயுர்வேத மருந்துகளில் அதிகம் இடம்பெறுகிறது. இது இந்தியா முழுவதும் பயிரிடப்படுகின்ற ஒரு செடி வகை ஆகும். இதை வாயில் போட்டால் சற்று காரமாக சுறுசுறுவென்று இருக்கும். நல்ல மணமாக இருக்கும். இது ரொட்டி மற்றும் கேக் தயாரித்தலில் பயன்படுத்தப்படுகிறது. மதுபான வகைகளை மணமூட்டப் கையாளப்படுகிறது. இதன் விதையே மருத்துவப் பயன் கொண்டது.

ஓமத்தில் அடங்கியுள்ள சத்துக்கள்

ஓமத்தில், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தையாமின், ரிபோபுளேவின் மற்றும் நியாசின் போன்றவை அடங்கியுள்ளன. ஓமத்தில் மூன்று வகைகள் உள்ளன. ஓமம், குரோசாணி ஓமம், அசம்தா ஓமம் ஆகும்.

மருத்துவ குணம் கொண்ட ஒமம்

இலைகளின் சாறு பூச்சிகளுக்கு எதிரான சக்தி கொண்டது. வேர்கள் ஜீரணச் சக்தி மற்றும் சிறுநீர்க் கழிப்பினைத் தூண்டும் திறன்படைத்தது. கனிகளில் இருந்து கார்வீன் மற்றும் கார்வால் ஆகிய பொருட்கள் எடுக்கப்படுகிறது. கனிகளில் இருந்து வடிக்கப்படும் நீர் வயிற்றுப் போக்கினைக் கட்டுப்படுத்துகிறது. ஜீரணத்தையும் வயிற்று உப்புசத்தையும் குணப்படுத்துகிறது. குழந்தைகளின் குடல்வலி, வயிற்றுக் கோளாறுகளுக்கு தக்க மருந்தாகும். சுவாசக் குழாய் தொடர்பான நோய்கள், குடிப்பழக்கத்திற்கான அடிமைத்தனம், மனநோய், போன்றவற்றுக்கு மருந்தாக உதவுகிறது.

வயிற்றுப் பொருமல் நீங்க

சீதளத்தால் உண்டாகும் சுரம், இருமல், செரிமானம் சரியாக இல்லாதது, வயிற்று பொருமல் பேதி, குடலிரைச்சல், பல் சம்மந்தமான நோய்கள், இரைப்பு நோய் (ஆஸ்துமா) ஆசனவாய் நோய்கள் இவைகளை ஓமம் போக்கும்.

இன்று கூட நம் கிராமங்களில் சிறு குழந்தைகளுக்கு வயிறு வலித்து அழும்போது ஓமத் திரவம் கொடுப்பார்கள். இந்த ஓமத் திரவம் ஓமத்தை காய்ச்சி எடுக்கப்படுவது. இது குழந்தைகளுக்கு ஏற்படும் வயிறு மந்தம் தொடர்பான நோயை போக்கும் தன்மை கொண்டது.

பொதுவாக மந்தமானது சிறு குழந்தை களுக்குத்தான் ஏற்படும். மந்தம் இருந்தால் உடல் சோர்வுற்று, அஜீரணக் கோளாறு உண்டாகும். இத்தகைய மந்தத்தைப் போக்க ஓமம், சுக்கு, சித்திரமூல வேர்ப்பட்டை, இம்மூன்றும் சமபங்கு எடுத்து ஒன்றாக சேர்த்து பொடித்து அதனுடன் கடுக்காய் பொடி சேர்த்து அதில் சிறிதளவு எடுத்து மோரில் கலந்து கொடுத்தால் மந்தம் நீங்கும்.

ஓமத்திரவகம்

ஓமத்திராவகம் என்ற மாபெரும் மருந்து ஆதிகாலம் தொட்டு இன்றுவரை இருந்து வருகிறது. குழந்தைகளின் சர்வரோக நிவாரணியே ஓமத் திராவகம்தான். ஓமத்திராவகம் வீட்டில் இருந்தால் சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை வயிறு உபாதையின்றி வாழலாம்.

சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் 100 கிராம் ஓமத்தை 1 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அது பாதியாக வந்தவுடன் எடுத்து அருந்தினால் மேற்கண்ட அனைத்தும் தீரும்.

உடல் பலம் பெற

உடல் சோர்வை போக்குவதில் ஓமம் சிறந்த மருந்தாகும். ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும்.

சிலருக்கு தொண்டையில் புகைச்சல் ஏற்பட்டு இருமல் வரும். இவர்கள் ஓமம், கடுக்காய் தோல், முக்கடுகு, சித்தரத்தை, அக்கிரகாரம், திப்பிலி வேர் இவைகளின் பொடியை சம அளவு எடுத்து அதனுடன் சரிபாதி பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை கொடுத்து வந்தால் தொண்டை புகைச்சல் மற்றும் இருமல் நீங்கும் .

பசியைத் தூண்ட

நல்ல தூக்கமும், நல்ல பசியும் தான் ஆரோக்கிய மனிதனுக்கு அடையாளம். இந்த பசியும், தூக்கமும் பறந்துபோனால் நோய்களின் கூடாரமாக உடல் மாறி, அதனால் மனமும் பாதிக்கப்படும்.

பசியைத் தூண்டி உண்ட உணவு எளிதில் சீரணமாகவும், வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகள் தீரவும், ஓமத்தை கஷாயமாக்கி அருந்திவருவது நல்லது.

ஓமத்தை பொடித்து உச்சந்தலையில் வைத்து தேய்த்தால் ஜலதோஷம் குறையும். ஓமப்பொடியை துணியில் கட்டி நுகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும். சுவாசக்கோளறுகள், இருமல் போன்ற நோய்களை சீர்படுத்த ஓமம் சிறந்த மருந்தாகும். மேலும் குடலிரைச்சல், இரைப்பு, பல்நோய் போன்றவற்றையும் ஓமம் குணப்படுத்துகிறது

Sunday, June 1, 2008

பெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம்



இன்றைய கால கட்டங்களில் நாம் சாலையோரம் அன்றாடம் பார்க்கும் ஒரு வாடிக்கையான காட்சி முதியோர்கள் முருங்கைக்காயை விற்கும் நிலை. முதியோர்கள் பிறரிடம் கையேந்தி நிற்கும் நிலை. முதியோர்கள் கவனிப்பாரற்று தெருவில் கிடக்கும் நிலை. ஏன் இந்தநிலை? அவர்கள் பெற்றெடுத்த பிள்ளை அவர்களை கவனிக்காதது தான் இதற்குக் காரணம்.

தாரம் வரும் முன்பு பெற்றோராய் கண்ணுக்குத் தெரிந்தவர்கள் தாரம் வந்த பின்பு வேற்றோராய் தெரிகிறார்கள் .

பத்து மாதம் சுமந்து பல துயரங்களையும் தாங்கிக் கொண்டு பிள்ளையை பெற்றெடுத்த தாய் பகல் இரவாய் கண் விளித்து ஈ எறும்பு கடிக்காமல் வளர்த்து மேதினியில் கல்வி பெற வைத்து சொந்த காலில் நிற்கும் வரை ஆளாக்குகிறாள் . தந்தை தன் இளமையை வீணடித்து தன் சுகம் முக்கியமல்ல தன் பிள்ளையின் சுகமே தன் சுகம் என்று எண்ணி ஊரை விட்டு ஊர் கடந்து தன் தாய் நாட்டை விட்டு வேறு நாட்டை நோக்கி சென்று உழைத்து தன் பிள்ளைக்குப் பிடித்த பொருள் வாங்கிக் கொடுத்து தன்னை ஆளாக்குகிறார்கள் .

அந்த பெற்றோர் இவ்வளவு கஷ்டப்படுவது எதற்கு? தன்னை தன் பிள்ளை வயோதிராக ஆகும் போது கவனிக்க வேண்டும் என்பதற்காகத் தானே.

அந்த பெற்றோர் தான் முதிய வயதையடையும் போது தம்மை தம் குழந்தை கவனிக்காது என்று நினைத்து தனக்கு சேமித்து வைத்திருக்கலாமே.

அப்படி சேமித்து வைக்காமல் தன் பிள்ளை ஆசைப்படும் பொருளையெல்லாம் தனக்கென்றில் லாமல் வாங்கி கொடுக்க வேண்டும் என்பதற்காக கடன் வாங்கி கொடுக்கிறார்கள் .

நம்மை சிறுவயதில் கவனிக்காமல் சாப்பாடு போடாமல் படிக்க வைக்காமல் இருந்திருந்தால் நம் நிலை என்னவாகும் என்று சிந்தித்தோமா?

வறுமையில் இருக்கும் பலர் தன் தாயை, தந்தையை கண்ணுக்குள் போற்றி வைக்க முடியலையே என்று கவலையாகிறார்கள் . ஆனால் வசதி படைத்தவர்கள் தன் தாயை, தந்தையை முதியோர் காப்பகத்தில் போய் சேர்த்து விடுகிறார்கள். அல்லது மாத சம்பளத்திற்கு ஆளை வைத்து விட்டு, பெற்றோரை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. இன்னும் சிலர் மாதத்திற்கொரு முறை 500 ரூபாயை அனுப்பி விட்டு தனது பொறுப்பு நீங்கிவிட்டது என்று எண்ணுகிறார்கள் .

முதிய வயதை அடைந்து விட்டால் அவர்கள் சிறு பிள்ளைக்கு சமமானவர்களே! சின்ன பிள்ளை நம்மை ஏதாவது சொன்னால் பொறுத்துக் கொள்ளத் தானே செய்வோம். அதைப் போன்று தான் பெற்றோர் எதையாவது சொன்னால் பொறுக்க வேண்டும். அதை விட்டு விட்டு, ஏய் கிளவி! ஏய் கிளடு! வாயை மூடு. எங்கையாவது ஒழிந்து போ, செத்து தொலை என்றெல்லாம் கூறக்கூடாது.

உம்முடைய ரப்பு – அவனைத் தவிர (வேறு எவரையும் எதனையும்) வணங்கலாகாது என்று விதியாக்கியுள் ளான். இன்னும் தாய் தந்தையருக்கு (நன்கு) உபகாரம் செய்ய வேண்டும் என்றும் (விதியாக்கியுள் ளான்) அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவ்விருவருமோ உம்மிடத்தில் திண்ணமாக முதுமையை அடைந்து விட்டால் அவர்களை (நோக்கி) 'சீ ' என்று சொல்ல வேண்டாம். அவ்விருவரையும் விரட்டாதீர்கள் . அவ்விருவருக்கும் கண்ணியமான சொல்லைக் கூறவும். (அல்குர் ஆன் 17:23)

பெற்றோர் தன் பிள்ளை வாந்தி எடுக்கும் போதும், மலஜலம் கழிக்கும் போதும் சுத்தம் செய்கிறார்கள் . அறுவறுப்பு படுவதில்லை. வெறுக்கவில்லை. நாறுதே என்று திட்டவில்லை. விரட்டவில்லை. ஆனால் அவர்கள் முதியோராய் மாறி மேற்கண்ட செயலை செய்தால் முகம் சுளித்து திட்டித்தீர்த் து விடும் நிலை. அன்று அவர்கள் நம்மை இதைப் போன்று திட்டி தீர்த்து சுத்தம் செய்யாமல் இருந்திருந்தால் நாம் எப்படி இருந்திருப்போம் . சிந்திக்க வேண்டுமே!

தாய் தனது வயிற்றில் கருவை சுமந்தவுடனேயே வாந்தி எடுக்கிறாள். எதையும் சாப்பிட முடிவதில்லை. நெஞ்சு எரிச்சல். வயிற்று வலி என்று ஒவ்வோரு வேதனையையும் அடைந்து தன்னை பெற்றெடுக்கிறாளே! அப்படிப் பட்ட தாய்க்கு நன்றி செலுத்தாமல் வீட்டை விட்டும் வெளியேற்றுகிறோமே! இது நியாயமா?

மனிதனுக்கு அவனுடைய பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள் ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு. (அல்குர் ஆன் 31:14)

பெற்றோரை கவனிப்பது ஆண் மக்களா? பெண் மக்களா? என்பதிலும் பிரச்சினை. பெண் பிள்ளைதான் தாயைக் கவனிக்க வேண்டும் என்று ஆண் வர்க்கத்தினரில் சிலர் கூறுகிறார்கள். ஆண் பிள்ளைதான் கவனிக்க வேண்டும் என்று பெண் வர்க்கத்தினரில் சிலர் கூறுகிறார்கள். ஆக ஒருவரையொருவர் குற்றம் சாட்டி தன் கடமையிலிருந்து தப்பிக்க நினைக்கின்றனர்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் தன் பெற்றோரைக் கவனிப்பது கடமை, ஓர் ஆண் தனது மனைவியிடம் தன் தாயை கவனிக்க சொல்ல வேண்டும். தன்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். பெண் தனது கணவரிடத்தில் தன் தாயை கவனிக்க வேண்டுதலை விடுக்க வேண்டும்.

நமது பெற்றோரைக் கவனிப்பது எந்தளவுக்கு சிறந்தது என்றால் ஹிஜ்ரத், ஜிஹாத் செய்வதைவிட சிறந்தது.

ஒரு மனிதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சமூகத்திற்கு முன்னோக்கி வந்து கூறினார்கள் (இறைத்து}தர் அவர்களே) அல்லாஹ{தஆலாவிடம் நற்கூலியைத் தேடியவனாக ஹிஜ்ரத் செய்யவும் ஜிஹாத் செய்யவும் தங்களிடம் உறுதிப் பிரமாணம் செய்கிறேன்.

அப்பொழுது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உம் பெற்றோரில் யாரும் உயிருடன் உள்ளனரா? என்று வினவினார்கள். அதற்கு அவர் ஆம்! இருவரும் உள்ளனர் என்றார். நீ அல்லாஹ்விடம் நற்கூலியைத் தேடுகின்றீரா? என்று வினவினார்கள். அதற்கவர் ஆம் என்று கூறினார். அப்படியானால் உம் பெற்றோரிடம் திரும்பிச் சென்று அவ்விருவரிடமும் அழகிய தோழமையை கடைப்பிடிப்பீராக என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பகர்ந்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் (ரலி)

நு}ற்கள் : புகாரி, முஸ்லிம்



அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவிமடுத்துள்ளேன் . உங்களுக்கு முன் வாழ்ந்த மக்களில் மூவர் வெளியே நடந்து சென்றார்கள். இரவு நேரமாகி விட்டதால் ஒரு குகையில் இரவைக் கழிக்க நாடி அதனுள் நுழைந்தனர். அப்பொழுது ஒரு பாறாங்கல் மலையிலிருந்து உருண்டோடி வந்து அக்குகையில் வாசலை அடைத்துக் கொண்டது. அப் பொழுது அவர்கள் (ஒருவருக்கொருவர்) கூறிக் கொண்டனர். நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் நல் அமல்களைக் கொண்டு அல்லாஹ{தஆலாவிடம் துஆச் செய்தாலே தவிர நீங்கள் ஈடேற்றம் பெற முடியாது.

அப்பொழுது அவர்களில் ஒருவர் கூறினார் இறைவா! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர். அவ்விருவரையும் முந்தி என் குடும்பத்தினருக் கோ எனது அடிமைகளுக்கோ நான் பாலைப் புகட்டமாட்டேன் . ஒருநாள் நான் விறகைத் தேடி வெகுது} ரம ; சென்று விட்டேன். (இரவில் வெகு நேரம் கழிந்து அவ்விருவரும் உறங்கிய பின்னரே நான் வீடு திரும்பினேன். அவர்களுக்கு (புகட்டுவதற்காக) பாலைக் கறந்தேன். அப்பொழுது அவ்விருவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்களை உறக்கத்தில் இருந்து எழுப்புவதையும் அவர்களுக்கு முந்தி என் குடும்பத்தார்களுக் கும் என் அடிமைகளுக்கும் பாலைப் புகட்டுவதையும் வெறுத்தேன். பால் சட்டியை கையிலேந்தியவனாக வைகரைப் பொழுது வரை அவர்கள் விழிப்பதை எதிர்ப்பார்த்துக் கொண்டேயிருந் தேன். அப்பொழுது என் குழந்தைகள் எனது காலடியில் பசியால் கத்திக் கொண்டிருந்தனர். (வைகறைப் பொழுதின் நேரத்தில்) அவ்விருவரும் எழுந்து பாலைப் பருகினார்கள்.

இறைவா! இதனை நான் உனது திருப்பொருத்ததை நாடிச் செய்திருந்தால் இந்தப் பாறாங்கல்லை எங்களை விட்டு அகற்றுவாயாக என்று கூறினார்கள். அப்பொழுது அந்தப் பாராங்கல் ஓரளவு நகர்ந்தது....

அறிவிப்பவர் : உமர் இப்னு கத்தாப் (ரலி) நு}ற்கள் : புகாரி, முஸ்லிம்

அல்லாஹ்வின் திருப்பொருத்தத் தை நாடி பெற்றோருக்கு நன்மை செய்தால் மாபெரும் கஷ்டம் வந்தாலும் அல்லாஹ் காப்பாற்றுவான் .

பெற்றோருக்கு சேவை செய்தல் என்ற நல்லமல் செய்தால் சுவர்க்கம். இல்லையேல் நரகம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், வயது முதிர்ந்த தன் பெற்றோர் இருவரையோ, அல்லது ஒருவரையோ பெற்றிருந்தும் சுவனம் செல்லாமல் போய் விட்ட மனிதன் நாசமடைவானாக! பின்னர் நாசமடைவானாக! பின்னர் நாசமடைவானாக.

அறிவிப்பவர் : அப10ஹ{ரைரா (ரலி) நு}ல் : முஸ்லிம்

அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் சொன்னவைகளை வாழ்வில் நடைமுறைப் படுத்தி எந்த சாக்குபோக்கும் சொல்லாமல் கனிவு மற்றும் பாசம் என்ற இறக்கையை விரித்து பெற்றோருக்கு பணிவிடை என்ற நல்லமல் செய்து சுவனம் என்ற நற்கூலியை பெற முயற்சிப்போமாக

Wednesday, April 16, 2008

மய்யித் சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முறைகளும்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ஒரு முஸ்லிம் மரணித்துவிட்டால் அவரைச் சுற்றியுள்ள முஸ்லிகள் உடனே அவருக்கு செய் யவேண்டிய அவசியமான குளிப்பாட்டுதல், கஃபனிடுதல், தொழவைத்தல், அடக்கம் செய்தல்போன்றவற்றை செய்வது கட்டாய கடமையாகும்.ஆனால் நம் இஸ்லாமியர்களின் பெரும்பாலானவர்களிள் குடும்பத்தில் யாராவது இறந்து விட்டால் அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் அந்த மைய்யத்திற்க்கு செய்ய வேன்டிய கடமைகள் என்ன என்று கூட தெரியாமல் இருக்கின்றார்கள் .இன்னும் சில குடும்பங்களில் முஅத்தின்(மோதினார்) இமாம்(அஜ்ரத்)போன்றோரை அழைத்துவந்து மைய்யத்திற்க்கு செய்யவேண்டியதை செய்யுங்கள் என்று சொல்லி விட்டு அந்தகுடும்பத்தில் உள்ளவர்கள் ஒதுங்கி கொள்கிறார்கள். இந்த நிலையைப் போக்கி இதன்உண்மையான நிலைகளை நமது சகோதரர்கள் புரிந்து செயல்பட வேண்டு மென்ற நன்நோக்கில்என்னால் முடிந்த வரை குர்ஆன் ஹதீஸின் அடிப்படையில் இதை தொகுத்துள்ளேன்.அதனால் ஒவ்வொரு முஸ்லிமும் தங்கள் குடும்பத்தில் ஏற்ப்படும் மைய்யித்திற்க்காவது நாமேஅதற்க்கு செய்யவேண்டிய கடமைகளை செய்ய வேண்டும் என்று எண்ணி இவைகளை நாம் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பது தான் எனது ஆசையாகும் அல்லாஹ் அதற்க்கு அருள்புரியவேண்டுமென துஆ செய்கிறேன் (ஆமீன்) தயவு செய்து இதில் குறைகள் இருப்பின் சுட்டிகாட்டுங்கன்; இன் ன்ஷா அல்லாஹ் திருத்தி கொள்கிறேன்
(குல்லு நப்சின் தாயிகதுல் மவ்த்) ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை அடைந்தேதீரும். (அல்குர்ஆண். 3ஃ185) என்ற அல்லாஹ்வின் கூற்றுக்கிணங்க ) இந்த உலகில் பிறந்தஅனைவருமே ஒரு நாள் இறப்பவர்கள்தான் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது நமக்கு .முன்னர் வாழ்ந்த அனைவரும் இறந்தது போலவே நாமும் ஒரு நாள் இறப்போம்இ நம்மையும்ஒரு நாள் கப்ரில் வைப்பார்கள் என்பது உண்மைஇ ஆனால் நாம் எங்கு? எப்படி? எப்போது?ப்இறப்போம் என்பது அல்லாஹ் மட்டுமே அறிந்திருக்கிற மறைவான ஞனத்தில் உள்ளதாகும் .எனவே நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ள இன்பங்களை தகர்த்தொழிக்கக்கூடிய (மரணத்) தைய அதிகமதிகம் நிணைவு கூருங்கள்(திர்மிதி)என்ற சொல்லிற்கிணங்க ங்மரணத்திற்குப் பின்னருள்ள வாழ்க்கைக்காக அல்லாஹ்வும் ரசூலும் ஏவிய நற்செயல்களை அதிகம் கடை பிடித்து அவர்கள்தடுத்துள்ள காரியங்களை தவிர்த்துக் கொள்வது நம் அனைவர்கள் மீதும் கடமைய கடமையாகும். ஆகவே ஒரு முஸ்லிம் மரணித்துவிட்டால் அவரின் குடும்பத்தில் உள்ளவர்கள் செய்ய வேண்டியகடமைகள் பல உள்ளன அவைகள் குறித்து இன்ஷா அல்லாஹ் கானலாம்

1. மைய்யத்தின் கண் திறந்து இருந்தால் அதைக் கசக்கி மூட வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் அபூஸலமா(ரலி)அவர்கள் இறந்தபோது அவர்களின் கண்களை கசக்கி மூடி விட்டு கூறினார்கள் உயிர்கைப்பற்றப்படும்போது பார்வை அதை பின்பற்றி (நிலை குத்தி) நின்றுவிடுகிறது என்று கூறினார்கள் (முஸ்லிம்)

2. இறந்த உடனேயே அந்த மைய்யித்து விகாரம் அடையாத அளவுக்கு உடல் சூட்டோடு இருக்கும்போதே கை கால்களை இலகுபடுத்தி சீராக படுக்கவைக்கவேண்டும். அதோடு அந்த மைய்யத்தின் வயிறு ஊதாமல் இருப்பதற்காக சற்று கன கனமான பொருளை வயிற்றில் வைக்க வேண்டும்.

3. மை மைய்யித்தின் உடல் முழுதும் ஆடையால் மறைக்கவேண்டும்

நபி(ஸல்)அவர்கள் இறந்த போது கோடு போட்ட ஒரு ஆடையால் உடல் முழுக்க மூடி மறைக்கப்பட்டார்கள் என்று நபி(ஸல்) அவர்களின் மனைவி அன்னை ஆயிஷா(ரலி)அவர்கள் அஅறிவித்தார்கள் (ஆதாரம்: புஹாரிஇமுஸ்லிம்)

4. குளிப்பாட்டி ஆடையிட்டு (கபனிட்டு) ஜனாஸ தொழுகை நடத்தி முடித்து அடக்கம் செய்யும்வரை எல்லாவற்றையும் விரைவாகச் செய்ய வேண்டும் ஜனாஸாவை அடக்கம் செய்வதில் வேகம்காட்டுங்கள் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் (ஆதாரம் : புஹாரி,முஸ்லிம்)

5. எந்த ஊரில் அவர் இறந்தாரோ அதே ஊரில் அவரை அடக்கம் செய்ய முயற்ச்சிக்க வேண்டும்உஹது போரில் கொல்லப்பட்ட(ஷஹீதான)சஹா ஹாபாக்களை இடம் மாற்றாமல் அந்த இடத்திலேயே அடக்கம் செய்யுமாறு நபி(ஸல்)அவர்கள் கட்டளையிட்டார்கள் (ஆதாரம்:திர்மிதி. அபூதாவுத், நஸஈ,இப்னு மாஜா)

ஜனாஸாவை குளிப்பாட்டுதல்

ஜனாஸாவை குளிப்பாட்டுவது முதல் தொழுகை நடத்துவது வரை உள் ளவற்றை சிலர்செய்வதன் மூலம் மற்றவர்களின் மீதான கடமை நீங்கிவிடும். இதற்குதான் (ஃபர்ழ் கிஃபாயா) என்றுசொல்லப்படும் எவருமே இந்த கடமைகளை செய்யாதபோது எல்லோருமே குற்றவாளிகளாக தண்டிக்கப் படுவோம் .ஜனாஸாவை குளிப்பாட்டுவது முதல் அடக்கம் செய்வது வரை கலந்து கொண்டவரின் நன்மைபற்றி நபி (ஸல்) அவர்கள் அதிகமதிகம் கூறி இருக்கிறார்கள்.
: ஒருவர் தான் இறந்த பின் நீங்கள் தான் என்னை குளிப்பாட்டவேண்டும் என்று (வஸிய்யத்)மரண சாசனம் எழுதி வைத்திருந்தால் அவர்தான் அந்த ஜனாஸாவை குளிப்பாட்டுவதற்கு அதிகஉரிமை பெற்றவர். அப்படி வஸிய்யத் செய்யாதபட்சத்தில் இறந்தவருக்கு மிக நெருக்கமான உறவுமிக்கவர் உரிமை பெறுவார், ஏனெனில் அவர்கள்த தாம் அதிக அக்கறை கொள்வர். பெண்ணுக்கும் வஸிய்யத் விஷயத்தில் ஆணைப் போன்றே.

: கணவன் தன் மனைவியையும் மனைவி தன் கணவனையும் குளிப்பாட்டலாம் . நபி(ஸல்)அவர்கள் தமது மனைவி ஆயிஷா(ரலி)அவர்களிடத்தில் கவலைப் படாதீர்கள் எனக்கு முன்னால் நீங்கள் இறந்து விட்டால் நானே உங்களை குளிப்பாட்டுவேன் என்று கூறினார்கள்(ஆதாரம் :அஹ்மத்)

: அபூபக்கர்(ரலி) அவர்கள் நான் இறந்த பின் எனது மனைவிதான் பின் என்னை குளிப்பாட்டவேண்டும்என்று வஸிய்யத் செய்து இருந்தார்கள்.(ஆதாரம் : முஸன்னப் அப்திர் ரஸ்ஸாக்)
: ஏழு வயதிற்க்குட்பட்ட ஆண் அல்லது பெண் பிள்ளைகளில் யார் இறந்தாலும் அவர்களைதாய் அல்லது தந்தை குளிப்பாட்டலாம்.
: ஆண் கள் மட்டுமே உள்ள இடத்தில் பெண் இறந்து விட்டாலோ அல்லது பெண்கள் மட்டுமேஉள்ள இடத்தில் ஆண் இறந்துவிட்டாலோ குளிப்பாட்டாமல் தயமம் அதாவது ஒருவர் தன் இரண்டுகை களையும் பூமியில் அடித்து அவ்விரு கைகளையும் அந்த ஜனாஸாவின் முகம் கைகளில்தடவவேண்டும்
:காபிர் இறந்துவிட்டால் எக்காரணத்தை முன்னிட்டும் அவரை குளிப்பாட்டுவதோ அடக்கம் செய்வதோ கூடாது இதுப்பற்றி அல்லாஹ்வே கூறுகிறான் அவர்களில் யாராவது இறந்துவிட்டால்அவருக்காக நீர் ஒருக்க காலும் (ஜனாஸா) தொழுகை தொழவேண்டாம் இன்னும் அவர்களின் (கப்ரில்)அடக்கஸ்தலத்தில் அவருக்கு( பிரார்த்திப்பதற்க்காக)நிற்கவேண்டாம்(அல்குர்ஆண்.9 9ஃ84) என்று றுகூறுகிறான் தொழ வைப்பதே கூடாது என்று சொல்லும்போது மற்றதைப்பற்றி சொல்ல வேண்டியதில்லை

: மைய்யித்தை குளிப்பாட்டும் போது அதன் மருமப்பகுதிகள் யார் கண்களிலும் படாத வாறு மறைத்த நிலையிலேயே அதன் ஆடைகளை களையவேண்டும். பிறகு மைய்யித்தை சற்று உயர்த்திஉட்கா கார வைத்து அசுத்தங்கள் வெளியாகும் வரை வயிற்றை நன்றாக அழுத்த வேண்டும் இந்த நேரத்தில் தண்ணீரை அதிகமாக பயன்படுத்தி கொள்ளவேண்டும் .
: மைய்யித்தை குளிப்ப பாட்டுபவர் தனது கையில் துணி அல்லது கையுறையை சுற்றிக் கொண்டு மைய்யித்தின் மர்ம உறுப்புக்களை சுத்தம் செய்யவேண்டும டும். அந்த மைய்யத்து ஏழு வயதுக்கு மேற்ப்பட்டவராக இருந்தால் மர்ம உறுப்புகளை பார்க்காமலேயே கழுகவேண்டும்.பின்பு (பிஸ்மில்லாஹ்) என்று கூறி தொழுகைக்கு ஒழு செய்வதுபோல ஒழு செய்து விட வேண்டும். ஏனெனில் நபி(ஸல்)அவர்கள் தனது மகள் ஜைனப்(ரலி ரலி)அவர்கள் )இறந்தபோது அவர்களை குளிப் பாட்டிய பெண்களிடம் அவரின் வலதுபுறத்தையும் ஒழு செய்யும்உறுப்புகளையும் முதலில் கழுகுங்கள் என்று கூறினார்கள்(புஹாரி, முஸ்லிம்)

: மைய்யித்தின் வாயிலோ மூக்கிலோ தண் ணீரை செலுத்தக்கூடாது அதற்க்கு பதிலாகஈரத்துணியை விரலில் சுற்றிக்கொண்டு மைய்யித்தின் இரு உதடுகளையும் லேசாக பிளந்துபற்களையும் மூக்குத் துவாரங்களையும் மெதுவாக தேய்த்து சுத்தம் செய்யவேண்டும். அதன் பிறகு இலந்த இலை அல்லது வாசனைப் பொருள் கலந்த தண்ணீரால் முகத்தையும் தாடியையும்கழுகவேண்டும் பிறகு எஞ்சிய தண்ணீரை வைத்து உடல் முழுதும் குளிப்பாட்ட வேண்டும்.
: மைய்யித்தை குளிப்பாட்டும்போது வலது பக்கமாக ஆரம்பிக்கவேண்டும் என்று ஹதீஸ்வந்திருப்ப பதால் கை, கால்களை வலது பக்கமாக கழுவ தால் ஆரம்பிக்கவேண்டும். இன்னும னும் ஒவ்வொரு; உறுப்பையும் மூன்று முறை கழுவ வேண்டும். ஒவ்வொரு தடவையும் வயிற்றை அழுத்தி சுத்தம் செய்ய வேண்டும். மூன்று தடவைக்குமேலும் அசுத்தங்கள் வெளியாகிகொண்டிருந்தால்தேவைக்கேற்ப ஒற்றைப் படையாக கழுவிக் கொள்ளலாம் என ஹதீஸில் வந்திருக்கிறது.
கடைசியாக கழுகும்போது துர் வாடைகளை நீக்கிவிடுவதற்காக கற்பூரத்தை பயன்படுத்திக்கொள்ளவேண்டும். பலமுறை கழுகியும் அசுத்தங்கள் வெளியாகிக்கொண்டிருந்தால் அந்த பகுதியில்பஞ்சை வைத்து அடைத்து விட்டு அசுத்தம் வெளியான அந்த இடத்தை மட்டும் கழுகிவிட்டுமறுபடியும் ஒழு மட்டும் செய்து விட்டால் போதுமானது குளிப்பாட்ட வேண்டிய அவசியம் இல்லை.இன்னும் கஃபன் அணிவித்த பிறகும் அசுத்தங்கள் வெளியாகிக்கொண்டிருந்தால் மறுபடியும் கழுவி கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.
மைய்யித்தை குளிர்ந்த நீரால் மட்டுமே குளிப்பாட்டவேண்டும்.
அசுத்தங்கள் அதிகம் இருந்து சுடு தண்ணீரால்தான் போக்கமுடியும் என்றிருந்தால்மட்டுமே சுடு தண்ணீரை பயன்படுத்தி கொள்ளலாம். அதுபோலவே அசுத்தங்களை நீக்க வாசனை சோப்புக்களை உபயோகிக்கலாம் . ஆனால் தோல் கிழியும் அளவுக்கு அழுத்தி தேய்க்க கூடாது . பல்லுக்கு மிஸ்வாக்கை பயன்படுத்துவது சிறப்பாகும்.

: மைய்யத்திற்கு மீசை, நகங்கள் சராசரிக்கு மேல் வளர்ந்திருந்தால் வெட்டலாம், (அக்குல்மர்மப்பகுதியின் முடிகளை வெட்டக்கூடாது

: பெண் மைய்யித்தின் கூந்தலை மூன்று பின்னல்களாக பின்னி முதுகு பக்கம் தொங்க விடவேண்டும். குளிப்பாட்டியபின் மைய்யித்தின் மேல் உள்ள ஈரத்தை துணியால் ஒத்தி எடுக்கவேண்டும்

: இஹ்ராம் அணிந்த நிலையில் ஒருவர் இறந்துவிட்டால் தண்ணீராலும் இலந்த இலைப்பொடியினாலும் மட்டுமே குளிப்பாட்டவேண்டும், வாசனைத்திரவியங்களைப் பயன்படுத்தக்கூடாது,ஆணாக இருந்தால் தலையை மூடக்கூடாது. ஹஜ்ஜில் இஹ்ராம் கட்டிய நபித்தோழர் ஒருவர்இறந்தபோது வாசனைத் திரவியங்களை பயன்படுத்தாமலும் தலையை மூடாமலும் கஃபனிடுங்கள்ஏனெனில் மறுமை நாளில் அவர் அதேகோலத்தில் தல்பியாக் கூறியவராக எழுப்பப்படுவார் என்றுநபி(ஸல்) அவர்கள் கூ றினார்கள் (புஹாரி, முஸ்லிம்)

: போரில் வீர மரணம் அடைந்த ஷஹீதின் ஆயுதங்கள் மற்ற போர் சம்மந்தப்பட்ட போருட்க்களை எடுத்துவிட்டு குளிப்பாட்டாமல், தொழகை நடத்தாமல் அவர் உடுத்தியிருந்தஆடையுடன் அடக்கம் செய்யவேண்டும். உஹது போரில் இறந்த சஹாபாக்களுக்கு நபி (ஸல்)அவர்கள் தொழ வைக்க வில்லை (புஹாரி,முஸ்லிம்)
: தாய் வயிற்றில் உள்ள குழந்தை நான்கு மாதம் முடிந்து விழுந்துவிடுமானால் அந்தகுழந்தைக்கு பெயர் வைத்து குளிப்பாட்டி தொழுகை வைத்து அடக்கம் செய்யவேண்டும்,ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒரு தாயின் வயிற்றில் மூன்றாவது நாற்பதில்பிண்டமாக இருக்கு கும் அக் குழந்தைக்கு வானவர் உயிர் ஊதுவார் என்று கூறினார்கள். (முஸ்லிம்) நான்கு மாதத்திற்க்கு முன் பாக விழுந்துவிட்டால் அது உயிரற்ற வெறும் பிண்டம் என்பதால்குளிப்பாட்டவோ தொழுகை நடத்தவோ அவசியமில்லை எந்த இடத்தில் வேண்டுமானாலும் அடக்கம்செய்யலாம்.
: தண்ணீர் கிடைக்காவிட்டாலோ அல்லது உடல் கருகி இருந்தாலோ அல்லது உடல் வெடித்துலோ சிதறி கிடந்து குளிப்பாட்ட முடியாத நிலையில் இருந்தால் ஒருவர் தன் கைய்யால் மண்ணில்அடித்து மைய்யித்தின் முகத்தையும் கையையும் தயம்மம் முறையில் தடவவேண்டும்.

: மைய்யித்தின் உடலில் காணப்படும் ஏதாவது விசயம் நல்லதாக இல்லாவிட்டால்குளிப்பாட்டியவர் அல்லாஹ்வுக்கு பயந்து அதை வெளியில் யாரிடமும் சொல்லகூடாது,இஸ்லாமியசகோதரர் ஒருவரை குளிப்பாட்டி அவரில் காணப்படும் குறைகளை குளிப்பாட்டியவர் மறைத்துவிட்டால் அல்லாஹ் அவரை நாற்பது தடவை மன்னிக்கிறான் என்று நபி(ஸல்)அவர்கள்கூறினார்கள்.(ஹாக்கிம்)
கஃபனிடுதல்
கஃபன் என்பது மரணித்தவரை குளிப்பாட்டி மூடி மறைப்பதற்கான ஆடைக்கு சொல்லப்படும்.மைய்யித்தை கஃபனிட்டு அடக்கம் செய்வது கட்டாயக் கடமையாகும். கஃபனாடை மைய்யித்தின்சொந்த செலவில் இருக்கவேண்டும். இஹ்ராம் கட்டிய நிலையில் இறந்தவரை அவர் அணிந்திருந்த இரண்டு ஆடைகளிலேயே கபனிடுங்கள் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.: இறந்தவர் கடனாளியாக இருந்தால் அல்லது தனது சொத்தை இன்னின்வர்களுக்குகொடுக்க வேண்டும் என்று மரண சாசானம் செய்திருந்தால் கடனையும் வஸியத்தையும் நிறைவேற்றிவிட்டு மைய்யித்தை அடக்கம் செய்வதற்க்கு தேவையான செலவு தொகையையும் எடுத்துகொண்டவயான பின்னரே வாரிசுதாரர்கள் அம்மய்யித்தின் சொத்தைப் பங்கிட வேண்டும். கஃபனிட்டுவதற்கானபொருளாதாரம் இல்லாத நிலையில் ஒருவர் இறந்துவிட்டால் அவரை அவரின் உறவினர்கள் கஃபனிட்டு அடக்கம் செய்வது கட்டாயமாகும். உறவினர்கள் இல்லாதபோது அல்லது இருப்பவர்கள்வசதியற்றவர்களாக இருந்தால் (பைதுல்மால்) பொது நிதியகத்திலிருந்து அதற்கான பொறுப்பைஏற்று நிறைவேற்ற வேண்டும். அப்படி ஒரு நிதியகம் இல்லையானால் அந்த ஊரிலுள்ளோர்அதற்கான ஏற்பாட்டினை செய்வது கட்டாயமாகும்.
: கஃபனிடுவதற்கு உடல் முழுக்க மறைக்கும் ஒரே ஒரு ஆடை இருந்தால் போதுமானது.எனினும் ஆண்களுக்கு வெள்ளை நிறத்தில் மூன்று ஆடைகளைக்கொண்டு கபனிடுவது விரும்பத்தக்கதாகும்
நபி(ஸல்)அவர்கள் மூன்று வெள்ளை ஆடைகளில் கஃபனிடப்பட்டார்கள்.(புஹாரி , முஸ்லிம்) அந்த ஆடைகளை கற்பு , பூரம் அல்லது சாம்பிரானி புகையால் வாசனைப்படுத்திக் கொள்ளவேண்டும்.பிறகு அந்த ஆடைகளை ஒன்றுக்கு மேல் ஒன்றாக விரித்து சந்தனம் மற்றும் வாசனைத்திரவியங் களை அந்த ஆடையில் தெளித்து அதன் பின்பு மைய்யித்தை அந்த ஆடையின் மேல்நிமிர்த்திக் கிடத்தி வைக்கவேண்டும்;. அப்போது நறுமணத்தால் ஈரப்படுத்தப்பட்ட பஞ்சை மைய்யித்தின் மல வாயிலில் வைக்கவேண்டும். அதன் மூலம் கெட்ட வாடைகள் வராமல்தடுக்கலாம். அதன் பிறகு அந்த பஞ்சையும் இறந்தவரின் மர்ம உறுப்புகளையும் சேர்த்து கட்டுவதுவிரும்பதக்கதாகும்.
: முகதுவாரப்பகுதிகளான கண்.மூக்கு.உதடு.காது. ஆகியவற்றின் மீதும் சஜ்தாவில் படும்ப்உறுப்புக்கள் மீதும் சந்தனம் அல்லது கற்பூ ரம் போன்ற நறுமணப்பொருள்களை வைத்தும் கஃபனிடுவது சிறந்ததாகும். உடல் முழுவதும் வாசனை பூசினாலும் தவறு இல்லை நபித் தோழர்கள் இப்படியும் செய்திருக்கிறார்கள்.
: வலது பக்கமாக உள்ள முதல் துணியை எடுத்து மடக்கிய பிறகு இடது பக்கமாக உள்ளதுணியை மடக்கி போர்த்த தவேண்டும். அதன் பிறகு அதுவரை அவர் மறுமப்பகுதியை மறைத்திருந்தமப்துணியை நீக்கி வி விடவேண்டும். பிறகு இரண்டாம், மூன்றாம் துணிகளை மடக்கிப் போர்த்த வேண்வேண்டும், பிறகு கஃபன் அவிழ் ந் துவிடாமல் இருப்பதற்காக கஃபனை அழுத்தமாக முடிச்சு போடவேண்டும். தலை முதல் கால் வரைக்கும் 5 அல்லது 3 முடிச்சிடுவது சிறப் பாகும். கப்ரில் வைத்தஉடன் முடிச்சுகளை அவிழ்த்து விடவேண்டும்.
: பெண்களுக்கு ஐந்து ஆடைகள் கொண்டு கஃபனிடவேண்டும்ளை
1. கீழாடை
2. முகத்தை மூடுவதற்கு முந்தானை
3. மார்பு பகுதிக்கு சட்டை போன்ற ஒரு ஆடை
4–5. உடல் முழுதும் மறைக்கும் இரண்டு ஆடைகள்.
மற்ற முறைகள் ஆணுக்கும் பெண்ணுக்கும்ஒரேமாதிரிதான் .
ஜனாஸா தொழுகை
ஜனாஸா தொழுகை என்பது ஃபர்லு கிபாயா ஆகும். மைய்யித் ஆணாக இருந்தால் அதன் தலைக்கு நேராகவும் பெண்ணாக இருந்தால் நடுவிலும் நின்று இமாம் தொழ வைக்கவேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் இப்படிதான் செய்தார்கள் என்ற செய்தி அபூ தாவூத் ஹதீஸ் கிதாபில்காணமுடிகிறது. இமாம் மஃமூம்களை விட சற்று முந்தி நிற்க வேண்டும். இடமில்லாமலிருந்தால்மஃமூம்கள் இமா முக்கு இடப்புறத்திலும் வலப்புறத்திலும் நின்றுகொள்ளலாம்.: ஜனாஸா தொழுகையில் நான்கு தக்பீர்கள் சொல்லவேண்டும். தக்பீர்களுக்கிடையே கையைஉயர்த்த வேண்டியதில்லை. முதல் தக்பீருக்கு பின் சூரதுல் ஃபாத்திஹா (அல்ஹம்து சூரா)ஓதிக்கொள்ளவேண்டும் .இரண்டாம் தக்பீருக்கு பின் அத்தஹியய்யாத்தில் ஓதப்படும் ஸலவாத்தை ஓதவேண்டும்;
(அல்லாஹ_ம்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மத் கமா ஸல்லைத்த அலாஇப்றாஹீம வ அலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீதும் மஜீத் . அல்லாஹ_ம்ம பாரிக் அலாமுஹம்மதின் வ அலா ஆலி முஹம்மத் கமா பாரக்த அலா இப்றாஹீம வ அலா ஆலி இப்றாஹீமஇன்னக ஹமீதும் மஜீத்) என்று கூற வேண்டும். அல்லது (அல்லாஹ_ம்ம ஸல்லி அலா முஹம்மத்என்று சொன்னால்கூட போதுமானதாகும்.
மூன்றாவது தக்பீருக்கு பின் ஹதீஸில் வரும் துஆக்களை ஓத வேண்டும் (அல்லாஹ_ம் மக்ஃபிர் லஹ_ வர்ஹம்ஹ_ வ ஆஃபிஹி வஃபு அன்ஹ_ வ நக்கிஹி மினல்கதாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யழு மினத்தனஸ் வ அப்தில்ஹ_ தாரன் கைரம் மின் தாரிஹிவ அஹ்லன் கைரம் மின் அஹ்லிஹி வ ஸவ்ஜன் கைரன் மின் ஸவ்ஜிஹி வ அத்ஹில்ஹ_ல்ஜன்னத வ அயித்ஹ_ மின் அதாப அதாபில் கப்ரி வமின் அதாபின்னார் )என்று ஓதிக்கொள்ளவேண்டும்இது முஸ்லிமில் இடம்பெரும் துஆவாகும்
நான்காம் தக்பீருக்குபின் சற்று அமைதியாக இருந்துவிட்டு வலது பக்கத்தில் மட்டும் ஸலாம்கொடுக்கவேண்டும். ( (ஹதீஸ் . ஹஹாக்கிம்)
: ஜனாஸா தொழுகைக்கு தாமதமாக வருபவர். இமாம் ஸலாம் கொடுத்த பின் தவறிவிட்டதைபூர்த்தி செய்யவேண்டும்ஜனாஸா தொழுகையை தவறிவிட்டவர் அடக்கப்பட்டிருக்கும் கப்ரில் நின்றுகூட தெழலாம்.தொழும்போது கிப்லாவிற்கும் இவருக்கும் இடையில் கப்ர் இருக்கவேண்டும் இப்படி நபி (ஸல்)அவர்கள் தொழுது இருக்கிறார்கள்(புஹாரி முஸ்லிம்)நான்கு மாதம் பூ ர்த்தியான பிறகு வயிற்றில் உள்ள குழந்தை வெளியாகி வெளியாகிவிட்டால் அதற்காக தொழுகை நடத்தவேண்டும். குறை மாதத்தில் வெளியாகி வெளியாகிவிட்ட குழந்தைக்கு தொழுகை நடத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை அதன் பெற்றோருக்கு பாவ மன்னிப்பு இறை கிருபைகிடைக்க துஆ செய்யவேண்டும் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் ( ஆதாரம் அபூ தாவூத்)
ஒரு இஸ்லாமிய சகோதரர் இறந்து. அவருக்கு ஜனாஸா தொழுகை . வைக்கப்படாமல் அடக்கம்செய்யப்பட்டதாகக் கேள்விப்பட்டால் அவருக்காக ஜனாஸா தொழுகை நிறைவேற்றுவது விரும்பத் தக்க கதாகும். தாகும்.வழிப்ப பறி கொள்ளையர்கள் மற்றும் தற்கொலை செய்து கொண்டவருக்கு இஸ்லாமிய பொது மக்கள் தொழுகை நடத்தலாம், ஆனால் ;ஊர் முக்கியஸ்த்தர்களும் அறிஞர்களும் அந்த ஜனாஸாதொழுகையில் கலந்துகொள்ளாமல் இருப்பதே சிறந்ததாகும் இதன் மூலம் தற்கொலை எண்ணத்தில் உள்ள மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமையும்.ஜனாஸா தொழுகையை பள்ளிக்கு குள்ளேயே வைத்து நடத்துவது கூடும். இப்படி நபி(ஸல்) அவர்கள் செய்து இருக்கிறார்கள் (முஸ்லிம்)
ஜனாஸா தொழுகைக்கு பிரத்தியேகமாக பள்ளிக்குவெளியே அடக்கும் இடத்திற்கு பக்கத்திலேயே ஓர் இடம் அமைத்துக்கொள்வது நபி வழியாகும்.

ஜனாஸாவை சுமப்பதும் அடக்கம் செய்வதும்
ஜனாஸாவை தோள் மீது சுமந்து செல்வது சுன்னத்தாகும். ஜனாஸாவை தாமதப்படுத்தாமல் விரைவாக கொண்டு செல்லுங்கள் என்று நபி(ஸல்)அவர்கள் சொன்னார்கள்.ஜனாஸாக்கு முன்பாக, பின்பாக, வலது, இடது பக்கமாக எப்படி வேண்டுமானாலும்செல்லலாம் இப்படி செல்ல ஹதீஸில் ஆதாரம் இருக்கிறது (அஹ்காமுல் ஜனாயிஸ் அல்பானீ)ஜனாஸாவை பின்பற்றிச்செல்லும் யாரும் அந்த ஜனாஸாவை பூமியில் வைப்பதற்க்கு முன்பாக அமர்வது கூடாது அப்படி அமர்வதை நபி(ஸல்)அவர்கள் தடுத்து இருக்கின்றார்கள்.தொழக்கூடாத நேரங்களில் அடக்கமும் செய்யக்கூடாது. இது சம்மந்தமாக உக்பா பின் ஆமிர்(ரழி)அவர்கள் அறிவிக்கும் ஹதீஸே ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது
: மூன்று நேரங்களில்தொழக்கூ டாது என்றும் . எங்களில் இறந்தவர்களை அடக்கம் செய்யக்கூடாது என்றும் நபி(ஸல்)அவர்கள் தடை செய்தார்கள் . அந்நேரங்கள் !
1. சூரியன் உதிக்கும் போது.
2. சூரியன் மத்தியில் இருக்கும் போது.
3. சூரியன் மறையும் போது.
என்று அறிவிக்கப்பட்ட ஹதீஸ் . (முஸ்லிமில் லிமில்) பதிவாகி உள்ளது தடை செய்யப்பட பட்ட இந்த மூன்று நேரங்கள் தவிர மற்றபடி இரவு பகல் எந்த நேரமும் மைய்யத்தை அடக்கம் செய்யலாம்.
: பெண்ணை கப்ரில் வைக்கும்போது பெண்ணின் எந்த உறுப்பு பும் வெளியில் தெரியாதவாறும் கப்ரின் மேல் பாகத்தை துணியால் மறைப்பது சுன்னத்தாகும். மைய்யித்தை கப்ரில் இறக்கும்போது;கால் பகுதி வைக்க கப்படும் பக்கமாகவே இறக்கி மெதுவாக வைக்கவேண்டும் .கப்ரை தோண்டிவிட்டு அந்த கப்ருக்குள்ளேயே கிப்லா திசையில் ஒரு குழி தோண்டி அதில்தான்மைய்யித்தை வைக்கவேண்டும். இதற்க்குதான் (லஹ்த்) என்று சொல்லப்படும். சில இடங்களில்குழியின் மையப்பகுதியில் தோண்டி மையத்தை அடக்கம் செய்வா வார்கள் இதற்கு ( ர்(ஷக்கு) என்றுசொல்லப்படும் இப்படிச் செய்யக்கூடாது. இது பற்றி நபி(ஸல்)அவர்கள் கூறும்போது நமக்கு லஹ்த் " ம் மற்றவர்களுக்கு ‘ ஷக்கு கு’ ம் என்று கூறினார்கள் (அபூத தாவூத்) குறிப்பு ! இது பற்றி தெரிந்தவர்களிடம் கேட்டுக் கொண்டால் எளிதில் புரியும்.துர் நாற்றம் வெளியில் வர வராமலும் . கிழித்து தின்னும் மிருகங்கள் தோண்டி எடுக்காமல்இருப்பதற்காகவும் கப்ரை ஆழமாக தோண்டி பாதுகாப்பாக அடக்கம் செய்வது சுன்னத்தாகும்.மைய்யித்தை குழியிலே வாங்கி வைப்பது அந்த மைய்யித்தால் வஸிய்யத் செய்யப்பட்டவரோஅல்லது சொந்தக்காரர்களோ அல்லது யாரேனும் ஒரு முஸ்லிம லிம் அந்த பொறுப்பை ஏற்கவேண்டும்.
; மைய்யித்தை கப்ரில் வாங்கி வைப்பவர்( பிஸ்மில்லாஹி வஅலா சுன்னத்தி ரசூலில்லாஹி )என்று சொல்லிக்கொள்ளவேண்டும் இப்படிதான் நபி(ஸல்)அவர்கள் செய்தார்கள் (அபூ தாவூத்)மைய்யித்தின் வலது பாகத்தை சிறிது சரித்து கிப்லாவை நோக்கி கப்ரில் வைக்க வேண்டும் நீங்கள் இறந்தாலும் உயிருடன் இருந்தாலும் உங்கள் கிப்லா கஃபாதான் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்(பைஹகீ)
(மைய்யித்தின் தலைக்கு தலையனைப்போல் கல் மண் போன் ற எதையும் வைப்பது கூடாது.இஹ்ராம் அநிந்து இறந்தவரைத் தவிர மற்ற யாரையும் முகத்தைத் திறந்த நிலையில் அடக்கக்கூடாது. அடக்கிய பிறகு வந்திருக்கும் ஒவ்வொரும் குழியில் மூன்று முறை மண்ணள்ளிப் போட வேண்டும் இப்படி நபி(ஸல்)அவர்கள் செய்துள்ளார்கள் (இப்னு மாஜா) பிறகு கப்ரை மூட வேண்டும்அடக்கம் செய்யப்பட்ட கப்ருக்கும் சாதாரண இடத்திற்கும் வித்தியாசம் தெரிவத தெரிவதற்காக கப்ரை ஒரு ஜான் அளவுக்கு மண்ணை உயர்த்துவது கூடும். இப்படிதான் நபி(ஸல்)அவர்களின் கப்ருன் இருந்த ததாக புஹாரியில் ஒரு ஹதீஸ் இருக்கிறது. மேலும் இது கப்ருதான் என்று தெரிந்து கொள்வதற் காக தலைமாட்டில் ஒரு கல்லை வைப்பது சுன்னத்தாகும். உஸ்மான் பின் மழ்வூன்(ரழி) அவர்களின் கப்ரில் இப்படி செய்யப்பட்டது (அபூதாவூத்)
கப்ரின் மீது சுண்ணாம்பு, சந்தணம் பூசுவது, அதனை உயர்த்துவது, கட்டடம் கட்டுவது,பிறந்த, இறந்த தேதி அல்லது வேறு ஏதேனும் செய்தி எழுதுவது, அதன் மீது அமர்வது,மிதிப்பது, சாய்வது போன்ற அனைத்தையும் நபி(ஸல்)அவர்கள் தடுத்துள்ளார்கள் (அபூ தாவூத்)
ஒரு கப்ரில் ஒரு மைய்யத்திற்க்கு மேல் வைக்கக்கூடாது ஒவ்வொருவரையும் தனித்தனியாகஅடக்கம் செய்யவேண்டும். ஒரே நேரத்தில் அதிகமானோர் இறந்து தனித்தனி கப்ரு தோண்டிஅடக்கம் செய்ய முடியாத சூழ்நிலையில் நீளமாக ஓடை போன்று குழியைத் தோண்டி மைய்யித்தைஅடக்கம் செய்யலாம். அப்போதுகூட ஒரு மைய்யத்திற்கும் மற்றொரு மைய்யத்திற்கும் இடையில்சிறிதளவு தடுப்பை ஏற்படுத்தவேண்டும். இப்படிதான் உஹது போரில் ஷஹீதான வீர சஹாபாக்ஹகளை நபி (ஸல்) அவர்கள் அடக்கம் செய்ய உத்தவிட்டார்கள்: இறந்தவரின் வீட்டாருக்கு மற்ற உறவினர்கள் அல்லது சகோதரரர்கள் சாப்பாடு சமைத்துக்கொடுப்பது மார்க்கம் வலியுறுத்திய சுன்னத்தாகும். இறந்தவர் வீட்டில் சமைக்க சொல்லி சாப்பிடக்கூடாது.
ஜஃபர் பின் அபீதாலிப் (ரழி)அவர்கள் மரணித்தபோது ஜஃபருடைய குடும்பத்தாருக்குஉணவு தயார்செய்து கொடுங்கள் அவர்கள் கவலையில் இருக்கிறார்கள் என்று நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள்(முஸ்லிம்).எனவே நபிவழியைப் பின்பற்றி மரணம் சம்பவித்த வீட்டாருக்கு சமைத்துக் கொடுக்க வேண்டுமே தவிர. அந்த வீட்டில் இறைச்சியும் சோறும் சமைப்பது வேதனைக்குரிய விஷயமாகும். இறந்தவர் வீட்டில் சாப்பாடு தயாரிக்கச் சொல்லி அங்கு சென்றவர்களெல்லாம்சாப்பிடுவதையும் அவர்களுக்கு ஆறுதல் சொல்கிறோம் என்ற பெயரில் அடிக்கடி அந்த வீட்டில்கூட்டம் கூடுவதையும் நாங்கள் மார்க்கத்தில் ஹராமாக்கப்பட்ட ஒப்பாரி யின் வகைகளில் ஒருவகையாகவே கருதினோம் என்று நபித்தோழர்கள் கூறுகின்றார்கள் (அபூதாவூத்)
: ஆண்கள் மட்டுமே கப்ருகளை தரிசிப்பது(ஜியாரத் செய்வது)சுன்னத்தாகும். இதன்மூலம் இறந்தவர்களுக்காக துஆ செய்ய முடியும் அதோடு மரணம் பற்றிய சிந்தனை மனதில் ஏற்ப்பட்டு பாவம் செய்யாமல் இருப்பதற்க்கும் மறுமையை நினைவுபடுத்த இது வழிவகுக்கும்.கப்ரு களை தரிசிக்ககூடாது என்று உங்களை நான் தடுத்திருந்தேன் இப்போது நீங்கள்ஜியாரத் செய்யலாம் அது உங்களுக்கு மறுமையை ஞாபகப்படுத்தும் என்று நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள் (முஸ்லிம்)
பெண்கள் கப்ருகளை தரிசிக்கச் செல்லவே கூடாது அப்படிச் செல்வது பாவமாகும்''கப்ருகளை தரிசிக்கும் பெண்களை நபி(ஸல்)அவர்கள் சபித்துள்ளார்கள் ""(திர்மிதி, அபூதாவூத்,(நஸஈ இப்னு னுமாஜா, அஹ்மத்) பெண்கள் இயற்க்கையிலேயே பலகீனமானவர்கள் இதுபோன்ற ப லகீனமானவர் இழப்புகளை தாங் கிக் கொள்ளாமல் கன்னத்தில் அடித்து கொள்வது ஒப்பாரிவைப்பது சட்டைகளைக் கிழித்துக்கொள்வது போன்றவற்றை செய்துவிடுவார்கள். எல்லா வற்றுக்கும் மேலாக மறுமையைப்பற்றி நினைக்கும் அந்த இடங்களில் பெண்கள் வருவதால் வேறு சில குழப்பங்களநிகழ சாத்தியங்கள் இருக்கிறது என்பதால் ஹ ராமாக்கப்பட்டிருக்கலாம். (இன்று தர்ஹாக்களில் கண்கூடாக பார்க்கப்படும் நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்றுதான்)அடுத்து கப்ரை தரிசிப்பவர் அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன் வ இன்னா இன் ன்ஷா அல் லாஹ_ பிகும்லாஹிகூன் . என்று செல செல்லவேண்டும் நபி(ஸல்)அவர்கள் இப்படி செல்லும்படி கூறினார்கள்;(முஸ்லிம்) இது அல்லாமல் கப்ருக்குச் சென்று துஆ கேட்பதும் அதைக் கண்ணியப்படுத்தும்எண்ணத்தில் பணிந்து குனிவதும் அதைத் தடவி முத்தமிடுவதும் இணைவைத்தலாகும். ஷிர்க்என்ற எண்ணம் இல்லாமல்தான் இதையெல்லாம் செய்கிறோம் என்று சொல்லி யாரும் வாதிட முடியாது எல்லோரின் உள்ளத்தையும் அல்லாஹ் அறியக்கூடியவன் எந்த ஒரு முஸ்லிமும் பித்அத்திற்குஆளாகிவிடாமல் பார்த்து கொள்ளவேண்டும்
ஆறுதல் கூறுதல்

இறந்தவர் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்வது கண்டிப்பாக மார்க்கம் வழியுறுத்திய சுன்னத்தாகும்அதுவும் ஹதீஸில் வரக்கூடிய வார்தை தைகளைக்கொண்டே ஆறுதல் சொல்வது சிறப்பாகும்.(இன்ன லில்லாஹி மா அகத வலஹ_ மா அஃதா வகுல்லு ஷையின் இன்தஹ_ பிஅஜலின்முஸம்மா ஃபஸ்பிர் வஹ்த்தஸிப்) பொருள்:- நிச்சயமாக இறைவன் எதனை எடுத்துக் கொண்டானோஅது அவனு அவனுக் க் குரியதே யதே இன்னும் எதனை கொடுத்துள்ளானோ அதுவும் அவனு அவனுக்குரியதே அவனிடத் தில் எல்லாவற்றுக்கும் ஒரு தவணையுண்டு (அந்த தவணை முடியும்போது அவன் அதைஎடுத்துக் கொள்வான் அதுதான் நியதி எனவே) நன்மையை நாடி பொறுத்து கொள்ளுங்கள் என்றுஆறுதல் சொல்வதுதான் நபிவழி (புஹாரி, முஸ்லிம்) இன்னும் ( பிவழி அஃழமல்லாஹ_ அஜ்ரக ரக்) இந்த;) சோதனைக்காக அல்லாஹ் உங்களின் மறுவுலக கூலியை மகத்தானதாக்கட்டும் என்றும் இன்னும் (அஹ்ஸ னல்லாஹ_ அஜ்ரக்)உங்களின் கூலியை அல்லாஹ் அழகானதாக மாற்றிவிடட்டும்என்றும் ஆறுதல் சொல்லலாம்.

: ஒப்பாரி வைக்காமல் வார்த்தை வெளிப் படாமல் அழலாம். நபி(ஸல்)அவர்களின் மகன்இப்றாஹீம் இறந்தபோது கவலையுடன் நபி(ஸல்)அவர்கள் அழுதார்கள் ஆனால் ஒப்பாரி வைக்கவில்லை (புஹாரி, முஸ்லிம்)ஒப்பாரி வைப்பது இஸ்லாத்தில் ஹராமாகும். ஒப்பாரி என்பது ஒரு மய்யித்தை வீட்டில்வைத்துக் கொண்டு அல்லது அடக்கியதற்குப் பிறகு இறந் தவர் செய்ததையும் பேசியதையும்சாதித்ததையும் சொல்லிச் சொல்லி அழுவதற்கு சொல்லப்படும். இப்படிச் செய்வது இஸ்லாத்தில்தடுக்கப்பட்டதாகும். துக்கம் தாங்கமுடியாதவன் என்று காட்டிக்கொள்வதற்காக ஆடைகளைக்கிழித்துக்கொள்வது கன்னத்தில் அடித்துக்கொள்வது நெஞ்சில் அடித்துக்கொள்வது மொட்டைபோட்டுக்கொள்வது இவையனைத்தும் மார்க்கத்திற்கு எதிரான அறியாமைக் காலத்து பழக்கமாகும்நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் கண்ணத்தில் அடித்துக் கொள்பவனும் ஆடைகளைக் கிழித்துக்கொள்பவனும் அறியாமைக் காலத்து மக்கள் கூறிய வார்த்தைகளைப்போல் சில வார்த்தைகளைக்கூறி ஒப்பாரி வைப்பவனும் நம்மைச் சார்ந்தவன் இல்லை என்று கூறினார்கள் (புஹாரி, முஸ்லிம்)
: இறந்தவரின் குடும்பத்தினர் குளிக்காமல், நல்ல ஆடைகள் அணியாமல், வியாபாரம்செய்யாமல் மனைவி மக்களுடன் சந்தோசமாக இல்லாமல் துக்கம் அனுசரித்துக் கொண்டிருப்பதைஇஸ்லாம் கண்டிக்கின்றது. இறந்தவரின் மனைவியைத் தவிர வேறு எவரும் மூன்று நாட்களுக்குமேல் துக்கம் அனுசரிக்கக்கூடாது என நபி(ஸ ல்)அவர்கள் கூறியுள்ளார்கள். இறந்தவரின் மனைவிமட்டும் நாலு மாதம் பத்து நட்கள் துக்கம் அனுசரித்தாக வேண்டும். அதே சமயம் அவர் இறக்கும்போது அவள் கர்ப்பிணியாக இருந்தால் குழந்தை பெற்றெடுக்கும் வரைதான் துக்கம்அனுசரிக்கவேண்டும். இதற்குத்தான் '' இத்தா "" என்று இஸ்லாம் கூறுகிறது.ஆனால் தற்போது நம் சமுதாயத்தில் சில ஊர்களில் 40 நாட்கள் தனிமையில் இருந்துவிட்டால்இத்தா முடிந்துவிட்டது என்று கருதுகிறார்கள். இது இஸ்லாம் காட்டிய வழிமுறை அல்ல.
: இன்னும் இதுபோன்ற பித்அத் துகளில் ஒன்றுதான் ஜனாஸாவைத் து}க்குவதற்க்கு பயன்படுத்தும்(சந்து}க்)ஜனாஸாப் பெட்டியின் மீது பச்சை சைத் துணி விரிப்பது, து}க்கித் செல்கிறபோது ஷஹாதா கலிமாவை சப்தமிட்டுக் கொண்டு செல்வது, ஜனாஸா தொழுகைஹமுடிந்தவுடன் இமாம் துஆச் செய்ய மற்றவர்கள் ஆமின் கூறுவது அடக்கி முடிந்த பின்னர் கப்ரின்தலைமாட்டில் இருந்து கொண்டு தல்கீன் என்ற பெயரில் பலருக்கும் புரியாத மட்டு மின்றி அதைஓதுபவர்களில் கூட பலருக்கு அது என்ன என்று தெரியாத சில அரபி வார்த்தைகள் கூறுவது போன்ற ஏராளமான பித் அத்கள் நடைபெறுகின்றன. இறந்தவர் வீட்டில் நட நடக்கும் அனாச்க்சாரங்களை ஒரு புத்தகமாகூட வெளியிடலாம் டலாம்: எனவே ஒவ் வொரு குடும்பத்தாரும் இந்த விசயங்களைப் படித்துத் தெரிந்துகொள்வதுஅவசியமாகும். ஒருவர் இறந்துவிட்டால் மோதினார் தான் வரவேண்டும் என்றில்லாமல் அதற்குச் செய்ய வேண்டிய கடமைகளை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும்.ஆகவே மேற்கூறப்பட்ட இந்த விசயங்களை ஒவ்வொரு முஸ்லிமான ஆணும் பெண்னும் படித்துதெரிந்துகொண்டு மற்றவர்களுக்கும் படிக்கும் சந்தர்ப்பத்தை ஏற்ப்படுத்திக் கொடுத்து இம்மையிலும்மறுமையிலும் வெற்றி பெறுவோமாக ஆமீன் வஸ்ஸலாம்.
தொகுத்தவர் : ஆ.யு. லியாக்கத் அலி (மிஸ்பாஹ)
(Y. B. A. KANOO. DAMMAM)

இதில் இருக்கும் தவறுகளை இந்த முகவரியில் தெரிவிக்கவும்(sfirthouse@yahoo.co.in). தவறுகள் இல்லாத பட்சத்தில் உங்களால் முடிந்த வரை இந்த செய்தியை இந்த சமுதாயத்திற்கு சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். காரணம் நன்மையை ஏவி தீமையை தடுப்பது நம் எல்லோரும் செய்ய வேண்டியது ஆகும்.
அன்புடன்

S.பிர்தௌஸ்